கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளை இல்லங்களிலேயே தங்கியிருக்குமாறு அறிவிப்பு!

கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளை எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு தமது உத்தியோகப்பூர்வ இல்லங்களிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வெலிக்கடை கொழும்பு சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலை ஆகியவற்றில் பணியாற்றும் எந்தவொரு அதிகாரியும் சிறைச்சாலையில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கண்டி போகம்பரை சிறைச்சாலையின் கூரை மீது ஏறு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலையின் கைதிகள் 800 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 30 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே விரைவில் பி சி ஆர் பரிசோதனையினை முன்னெடுக்குமாறு கோரி கைதிகள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் கண்டி – போகம்பரை சிறைச்சாலை கைதிகள் 4 50 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்

You May also like