கொழும்பு கருவாத்தோட்டப் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பிரபல அரசியல்வாதியின் பெயர் அம்பலமாகியுள்ளது.
கேகாலை மாவட்ட முன்னாள் அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அத்தாவுத செனவிரத்னவின் புதல்வரான புத்தி செனவிரத்னவே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார் என தெரியவருகிறது.
நீதவான் ஒருவரது இல்லத்திற்கு முன்பாக பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் வாகனத்தை தரித்து வைத்திருந்த காரணத்திற்காக அவரிடம் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியபோது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்து வாக்குமூலம் பதிவுசெய்தபின் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டு அரை மணிநேரத்திற்குள் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.