ரிஷாட்டை கொலை செய்ய சதி?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனை கொலை செய்ய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை கருணா அம்மானிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“சஹரானின் தாக்குதல் விடயத்தில் ஒர புள்ளியாக பார்க்கப்பட்ட நாமல் குமார நேற்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதிலே பல சர்ச்சைக்குறிய விடயங்கள் தெரிவிக்க்ட்டன. ரிஸார்ட் பதியுதீனை கொலை செய்ய 15 கொடி ரூபா ஒப்பந்தத்தில் திட்டமொன்றை கருணா அம்மானுக்கு பெற்றுக்கொடுக்க்பட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது. கருணா அமைமான் அரசாங்கத்துடன் தொடர்பு பட்டவர். பிரதமருக்கு வேண்டிய ஒரு நபர். ஆகவே இந்த விடயம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். உயிர்த் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் நாமல் குமார இப்படித்தான் காணொளி, சீடி என்பனவற்றை வெளியிட்டார். ஆகவே இதற்கு உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும். பிரான்சில் உள்ள துஸார பீரிஸ் என்கின்ற நபரும் இதனுடன் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்க்ட்டுள்ளது. அவர் இவ்வாறு தொடர்பு பட்டிருந்தால் அவரை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவந்து விசாரணைகள் முன்னெடுக்கபடவேண்டும்” என்றார்.

 

You May also like