கல்முனை பாடசாலைகளுக்கு விடுமுறை அளித்த காரணம் இதுதான்

அம்பாறை – கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு 7 நாட்கள் விமுறை அளித்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

அக்கரைப்பற்று, சாய்ந்தமருது மற்றும அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இன்று திடீர் பி.சி.ஆர் பரிசோதனைகளை பொதுசுகாதார பரிசோதகர்கள் நடத்தியிருக்கின்றனர்.

இதில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்தே கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You May also like