சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் கோவிட் அமைச்சராக நியமனம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு, மற்றுமொரு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டு தொடர்பான இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்ட பின்னணியிலேயே, விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு மற்றுமொரு அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது

You May also like