கொழும்பில் நடிகர் விஜயின் சொத்தை கபளீகரம் செய்ய துடிக்கும் சிங்களவர்கள்?

கொழும்பில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சொத்தை, பெரும்பான்மை இனத்தவர்கள் தன்வசப்படுத்த முயற்சிப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நடிகர் விஜய், 15 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியின் உறவினர்கள் ஊடாக சொத்தொன்றை கொள்வனவு செய்துள்ளதாக தமிழகத்தின் முன்னணி ஊடகமான நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் இந்த காணி இருப்பதாக கூறப்படுகின்றது.

நடிகர் விஜய் அவர்களின் மனைவி ஈழத்தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் அவரது உறவினர்கள் தற்போதும் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 15 வருடத்திற்கு முன்னர் கொழும்பு 13 கொட்டாஞ்சேனையில் பகுதியிலிருந்த பழைய தியேட்டர் ஒன்றை விஜய் அவர்கள் மனைவியின் உறவினர் மூலம் வாங்கி விடுதியொன்றை கட்டுவதற்காக தியேட்டரை உடைத்து தரை மட்டமாக்கிய நிலையில் இன்றுவரை வெறும் நிலமாகவே இருந்துவருகிறது.
தற்போது இந்த காணிப்பகுதியை சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற முனைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் என குறித்த ஊடகம் செய்தி வெளியட்டிருக்கின்றது.

You May also like