கண்டியில் இன்றும் நிலநடுக்கம்

கண்டியில் இன்றும் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

இன்று காலை 7.30 அளவில் இந்த நிலநடுக்கம் இடம்பெற்றிருப்பதாக புவிச்சரிதவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கண்டிமாவட்டத்தின் திகன, அம்பாக்கோட்டை, கெங்கல்ல உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 4ஆவது தடவையாக பதிவாகிய நிலநடுக்கம் இதுவாகும்.

ஏற்கனவே ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்றுவரை 4 தடவைகள் நிலநடுக்கம் பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like