மேலும் 197 பேர் இன்று நாடு திரும்பினர்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 197 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில் இருந்து 107 பேரும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 78 பேரும், ஜப்பானின் நரீட்டா நகரில் இருந்து 12 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த 197 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like