மத்திய மாகாணத்தில் பிரவேசிக்க தடை?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாகாணத்திற்கு பிற மாகாணங்களை சேர்ந்தவர்கள் பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக மத்திய மாகாணத்திற்குள் பிரவேசிப்பதை தவிர்த்து செயற்படுமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே பொதுமக்களை வலிறுயுத்தியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையினை கருத்திற்கொண்டு மத்திய மாகாண கொரோனா தடுப்பு செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் இயலுமானவரை மத்திய மாகாணத்திற்குள் பிரவேசிப்பதை தவிர்த்து செயற்படுமாறு அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் பிரவேசிக்க தடை?

You May also like