சபாநாயகர் தனிமைப்படுத்தலில்?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சபாநாயகரின் பாதுகாப்பு படையில் உள்ள அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் சபாநாயகரின் அலுவலகத்தில் உள்ள பலரிடமும் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பலரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.

இதுதவிர சபாநாயகர் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

 

You May also like