உச்சநீதிமன்றை எரித்த சிகரட்-விசாரணையில் அதிரடி தகவல்கள் அம்பலம்

கொழும்பிலுள்ள உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீ விபத்தானது சரியாக அணைக்கப்படாமல் வீசப்பட்ட சிகரட்தான் காரணம் என்பது விசாரணையில் ஓரளவுக்கு ஊர்ஜிதமாகியிருக்கின்றது.

அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையும் இதனையே தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்றில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து அமைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூன்று விசாரணைக் குழுக்களும் தொடர்ந்தும் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை நடத்திவருகின்றன.

இந்த நிலையில், நீதிமன்றில் சுத்தப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த சில பணியாளர்கள், குறித்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியில்தான் தேநீர் வேளையில் புகைப்பிடித்ததில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும், இது இரகசியமான முறையில் ஊழியர்கள் சிகரட் அருந்திவருகின்றமை பழக்கமாக இருந்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

You May also like