தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த முக்கிய முடிவு

புதிய அரசியல்கட்சிகளை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஜனவரிமாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

மேலும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You May also like