கண்டி தேசிய வைத்தியசாலை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களும், இன்றைய தினம் தமது கடமைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் சடலம் கடந்த பல வாரங்களாக குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக  சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பணியாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக குறித்த அலுவலகத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையிலே, இந்த விடயத்திற்கு தீர்வு காணப்படவேண்டுமென வலியுறுத்தியே தாம் தமது கடமைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You May also like