இன்று 403 பேருக்கு வைரஸ்;யுக்ரைன் பயணிகளுடன் சென்ற 28 பேருக்கு தொற்றா?

இலங்கையில் இன்றைய தினம் மட்டும் 403 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள யுக்ரைன் பயணிகளுடன் யாலை யானைகள் சரணாலயத்திற்கு சென்ற 28 சாரதிகள் தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி கூறினார்.

ஏற்கனவே இலங்கை வந்த யுக்ரைன் சுற்றுலா பயணிகளில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like