யுக்ரைன் பயணிகளுக்கு கொரோனா இல்லை- சான்றிதழ் கொடுத்த உதயங்க

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ள யுக்ரைன் பிரஜைகள் எவரும் தன்மைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படவில்லை என்று ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், யுக்ரைன் சுற்றுலாக் குழுக்களை இலங்கைக்கு அழைக்க தலைமைத்துவத்தை வகிக்கின்றவர் என கூறப்படுபவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

677 பயணிகள் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள நிலையில் அவர்களிடையே பி.சி.ஆர் பரிசோதனை செய்தால் சிலவேளை ஓரிருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகலாம். எனினும் அவர்களை இங்கு தனிமைப்படுத்தவேண்டி ஏற்படும். மக்களும் அச்சமடைவார்கள். அதனை செய்யமுடியாது. அவர்களில் 99.9 வீதமானவர்களுக்கு தொற்று இல்லை.

அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கின்ற 10 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு குறித்து உலகத்திற்கு செய்தி கொண்டுசெல்லப்படும். அதேபோல யுக்ரைனிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் எவரும் கொள்ளையர்களோ, திருடர்களோ, கொரோனா நோயாளிகளோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை யுக்ரைனிலிருந்து மேலும் 183 சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.
கடந்த 10 நாட்களிற்குள் யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் ஐந்தாவது குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

You May also like