பைடன் பதவியேற்பை தடுக்க அமெரிக்கா முழுதும் கலவரம்?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், கலவரங்கள் நாடெங்கிலும் வெடிக்கலாம் என்கிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்த சந்தர்ப்பமானாலும் தாம் எதிர்கொள்ள தயாராகிவிட்டதாக ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 20ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இதற்கான அரசமுறை நிகழ்வானது அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டின் உளவுத்துறையான எவ்.பி.ஐ, ஜோ பைடனின் பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு ட்ரப்பின் ஆதரவாளர்கள் நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களையும் சில வேளைகளில் கலவரங்களையும் நடத்தக்கூடும் என்கிற எச்சரிக்கையை அரசிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You May also like