இங்கிலாந்து அணி இரசிகருக்கு பொலிஸாரால் ஏற்பட்ட அவலம்(PHOTOS)

காலி கோட்டையில் நின்று இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை இரசித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் தீவிர இரசிகரான ரொபட் லூவிஸ் பொலிஸாரினால் அங்கிருந்து கீழிறக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் ரொபட் லூவிஸ் மனமுடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கான இரகசிகர்கள் பட்டாளத்தினால் உருவாக்கப்பட்ட பாமி ஆமி கழகத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான ரொபட் லூவிஸ், இங்கிலாந்து அணி அண்மையில் இலங்கை வந்திருந்தபோதே அவரும் வந்திருந்தார்.

கொரோனா தொற்று அச்சறுத்தலால் இங்கிலாந்து அணி மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பிய போதிலும் ரொபட் லூவிஸ் திரும்பாமல் காலியிலேயே தங்கியிருந்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர் தொடர்ந்தும் இலங்கையிலேயே தங்கியிருந்து இன்று ஆரம்பமாகிய போட்டிக்காக காத்திருந்தார்.

போட்டி ஆரம்பமாகியதை அடுத்து அவர் காலி கோட்டை மேலேறி போட்டியை இரசித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் அவரை கீழே இறக்கி எச்சரித்திருக்கின்றனர்.

You May also like