அடுத்தவாரம் தனியார் பஸ் வேலைநிறுத்தம்?

அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  எதிர்வரும் 9 ஆம் திகதி முதல்  சேவையில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக   தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தலைவர் கெமுனு விஜேரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமது தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கென அரசாங்கத்தினால் பல்வேறு சலுகைகள்  வழங்கப்பட்ட  நிலையில்  அவை கிடைக்கப்பெறவில்லை. இந்த விடயம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் உரிய அதிகாரிகளுடன்  பல்வேறு தடவைகள் கலந்துரையாடியுள்ள  போதிலும் இதுவரை தீர்மானங்கள் எட்டப்படவில்லை. எனவே நாட்டின் அனைத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து  பஸ்களில் சுவரொட்டிகளை  காட்சிப்படுத்தும் நடவடிக்கை இந்தவாரம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேபோல் பெப்ரவரி 2 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம். இவற்றுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல்   நாடளாவிய ரீதியில் அனைத்து பஸ்  சங்கத்தினரின் ஒன்றிணைந்த தீர்மானத்திற்கமைய   சேவையில் இருந்து விலகி செயற்படவுள்ளோம்.

You May also like