மௌனத்தை கலைத்தார் மைத்திரி – அதிரடி அறிவிப்பும் வெளியிட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மறுசீரமைப்புக்களை செய்ய அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று பகல் வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வருகின்ற தேர்தல்களை இலக்குவைத்து கட்சிக்குள் முழுமையான மறுசீரமைப்பை செய்ய தாம் உத்தேசித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த நாட்டின் அரசியலில் தீர்க்கமிக்க சக்தியாக இருந்தாகவும், மக்கள் சுதந்திரக் கட்சியை அப்படித்தான் நியமித்ததாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதற்கமைய, சுதந்திரக் கட்சியை விரைவில் மாவட்ட மற்றும பிரதேச ரீதியில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் மைத்திரி குறிப்பிடுகின்றார்.

You May also like