வர்த்தக அமைச்சிலும் கொரோனா- பந்துல குணவர்தனவின் நிலை இதுதான்

வர்த்தக அமைச்சின் செயலாளர் சந்திரானி ஜயவர்தனவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் அறிகுறியை அடுத்து அவர் நேற்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது வெளிவந்த முடிவுக்கு அமைய தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த சில தினங்களாக அமைச்சிற்கு செல்லவில்லை என்பதால் அவர் தனிமைப்படுத்தப்படுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது.

எவ்வாறாயினும் அமைச்சரிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு இன்று மாலை வெளிவரும் எனறும் தெரிவிக்கப்படுகின்றது.

You May also like