துறைமுக விவகாரம்-இன்று முக்கிய பேச்சு

 

கொழும்பு துறைமுக விவகாரம் தொடர்பான தீர்மானம் மிக்க கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ துறைமுக தொழிற்சங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

இதன்படி இன்று முற்பகல் 10 மணிக்கு கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கிழக்கு முனையம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்பட வேண்டும் என பிரதமரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்

இது தவிர வேறு எந்த தீர்மானத்திற்கும் தாங்கள் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கொழும்பு துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்துள்ள சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்துள்ள சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்திற்கு காலி மற்றும் திருகோணமலை துறைமுக சேவையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

You May also like