இலங்கையில் மேலும் நிலநடுக்கம் ஏற்படலாம்?

மத்திய மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் ஆய்வுப்பிரிவின் சிரேஸ்ட பேராசிரியரான அத்துல சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 21ஆம் திகதி வலப்பனை மடுல்சீனை பகுதியில் இரண்டு நிலநடுக்கம் பதிவானதோடு, நேற்று முன்தினமும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இதுதவிர, கடந்த வருடம் ஓகஸ்ட் 29ஆம் திகதியன்று கண்டி – திகன பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் கடந்த வருடத்தில் மட்டும் அங்கு 7 தடவைகள் நிலஅதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like