கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

அரசாங்கத்தின் விசாரணைகளில் நம்பிக்கை இருப்பதால்தான் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் பேராயர் சர்வதேசத்தை நாடுவதாக தெரிவித்திருந்தார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குறிப்பிட்டுள்ளது.

மிகவிரைவில் அவர் எதிர்பார்ப்பது போல ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை அம்பலப்படுத்துவதாக கல்வி அமைச்சரும், பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

‘அப்படியான எந்த குழப்பமும் இல்லை. நீதி கிடைக்காவிட்டால் என்றே அவர் கூறினார். இருப்பினும் அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்தி கர்தினாலிடமும் அதனை ஒப்படைப்போம். கர்தினால் அவர்கள் நிச்சயம் திருப்திகொள்வார். கடந்த ஆட்சியைப் போல எதனையும் மறைப்பதற்கு எமக்கு அவசியமில்லை. கர்தினால் 2 தடவைகள் சாட்சியமும் அளித்துள்ளார். நல்லாட்சிக்காலத்தில் விசாரணைகள் மீது கர்தினாலுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. இருப்பினும் நாங்கள் எதனையும் மறைக்க மாட்டோம். அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களை கர்தினாலுக்கும் நாட்டு மக்களுக்கும் பகிரங்கப்படுத்துவோம். கடந்த காலங்களில் அரசாங்கங்கள் அமைத்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பகிரங்கப்படுத்தவே இல்லை. ஆனாலும் அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அதுகுறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.குறிப்பாக அரசியல் பழிவாங்கல் சம்பந்தமான அறிக்கையானது 2000 பக்கங்களை உடையதாகும். அவை நிச்சயம் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

You May also like