இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பின் எதிர்வரும் காலங்களில் சிறியளவிலான நில அதிர்வுகள் பதிவாகக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் நேற்றைய தினம் 4 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு பதிவாகியிருந்தது.
இந்தோ-அவுஸ்திரேலிய புவித்தகட்டில் ஏற்பட்ட பிளவே இந்த நிலஅதிர்வுக்கான காரணம் என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இவ்வாறான சிறிய நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலஅதிர்வுகளினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படாது எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பிரிவு தெரிவிக்கின்றது.