விவசாய அமைச்சின் செயலாளர் திடீர் இராஜினாமா

விவசாய அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இராஜினாமா செய்திருக்கின்றார்.

தனது இராஜினாமா கடிதத்தை அவர் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த காலங்களில் அமைச்சிற்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் உச்சநிலைக்கு மத்தியிலேயே அவர் தற்போது பதவி விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like