விமலை சந்திக்க தயாராகும் ராஜித

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் விமல் வீரவன்சவுடன் பேச்சு நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ராஜித எம்.பி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அரசாங்கத்தில் இருந்து பிரிக்கப்பட்டு விமல் வீரவன்ச அமைச்சரை ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்துக் கொள்வதற்கான முயற்சி இருக்கின்றதா என்று வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன, அமைச்சர் விமலுடன் பேச வேண்டிய அரசியல் மொழியொன்று உள்ளது. அவரை அழைப்பதாயின் கட்சியின் உயர்பீடத்திலிருந்தே அழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

You May also like