தற்கொலை தாக்குதலை நடத்த 15 பெண்கள் தயார்;விசாரணையில் அம்பலம்?

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய குழுவை தலைமைதாங்கிய தீவிரவாதி ஸஹ்ரான் முன்பாக மேலும் 15 பெண்கள் தற்கொலை தாக்குதலை நடத்தும் உறுதி மொழியை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் மாவனெல்ல, ஹிங்குல பகுதியில் கைதாகிய 24 வயது இப்ராஹிம் ஷஹீடா ஆகிய பெண் சந்தேக நபரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகிறது.

இவர் ஸஹ்ரான் நடத்திய இரகசிய முகாமில் கலந்து கொண்டிருந்தார்.

நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த முகாமில் மேலும் 15 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர் என்றும், அவர்கள் தற்கொலை தாக்குதலை நடத்த முன் வழங்கும் உறுதி மொழியை வழங்கினார்கள் என்றும் கூறியுள்ளார்.

You May also like