யாழில் பிறந்த அதிசய குழந்தை-வியப்பில் மருத்துவர்கள்!

06 மாதமே ஆகின்ற சிசுவொன்று பிறந்து சுகதேகமாக வீடு சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் ஒக்டோபர் 27ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த குறித்த தாய், மாந்திகை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அந்த வகையில் தொடர்ச்சியாக 90 நாட்கள் அவர் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் அவருக்கு 06 மாதங்களேயான சிசு பிறந்துள்ளது. சிசுவின் நிறை 600 கிராம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் தாயும், சேயும் சுகதேகமாக வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

யாழ் வைத்தியசாலையில் சிசு பிறப்பு சார்ந்த விசேட மருத்துவர் ஒருவருக்கான பதவி நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்த நிலையில் அண்மையில்தான் விசேட மருத்துவ நிபுணர் தீபால் நவரத்ன நியமிக்கப்பட்டிருந்தார்.

                                                                                                                                   மருத்துவ நிபுணர் தீபால் நவரத்ன

 

 

You May also like