100 மாணவர்களில் 10 பேருக்கு என பாடசாலையை தாக்கும் நீரிழிவு!

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகியிருக்கின்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

மாத்தறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்வியை தவிர, விளையாட்டு உட்பட வேறு பிரிவுகளுக்கு மாணவர்களை பெற்றோர் ஈடுபடுத்தாமையே இதற்குப் பிரதான காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

You May also like