மைத்திரி மீது குற்றவியல் வழக்கு தொடர பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்வதற்கான பரிந்துரையை ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

அமைச்சரவை சந்திப்பு நேற்று இரவு நடந்தபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியை வழங்கியுள்ளார்.

அந்த அறிக்கையில் குறித்த பரிந்துரை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரி தவிர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதும் வழக்கு தொடர்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

You May also like