கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிக்கையின் பின் வீடு திரும்பிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதேபோல நாடாளுமன்றத்திற்கும் அவர் இன்று செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் 234ஆம் திகதி சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும் தொற்று நிலைமை மோசமடைந்த காரணத்தினால் அவர் அதேமாதம் 29ஆம் திகதி கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் பூரணமாக குணமடைந்த அமைச்சர் பவித்ரா கடந்த வாரம் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியிருந்தார்.
அவர் வீடு திரும்பிய நாளிலேயே பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.