மீண்டும் சந்திக்க தயாராகும் பஸில் -மங்கள

பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு சிறப்பு அரசியல் கலந்துரையாடலுக்கானது என்று தெரிவிக்கப்படுகிறது.
2005 ல் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்த மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அமைச்சிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் எதிர்க்கட்சியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் அண்மையில் கொழும்பில் நடந்த ஒரு திருமணத்தில் மங்கள மற்றும் பசில் சந்தித்து ஒரு நல்ல உரையாடலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்தே இருவருக்கம் இடையில் அடுத்த சில நாட்களில் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த முறை பசிலுக்கும் மங்களாவுக்கும் இடையிலான சந்திப்பின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

You May also like