இந்தியா,இலங்கை, மாலைதீவு வலய பாதுகாப்பு குறித்து அவசர பேச்சு!

சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு நோக்கில் ஆலோசனை நடத்தும் விசேஷ சந்திப்பு இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே இலங்கையில் இன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பு இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் நடைபெற்றது.

ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட வலய சமுத்திர செயற்பாடுகள் குறித்து தெரியப்படுத்தல், மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் நிவாரணம் அளித்தல், ஒன்றிணைந்த பயிற்சி மற்றும் உதவி செய்தல் என்பன எதிர்காலத்தில் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

மேலும் சமுத்திர பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல், கடல் வளங்கள் அழிவு என்பவற்றை நிறுத்துவது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவன பணிப்பாளரான ஓய்வு பெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன, இந்திய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட், மாலைதீவு உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மாயில் நசீர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளார்கள் என்று இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like