நாளை விசேட அறிவிப்புக்குத் தயாராகி வரும் மைத்திரி!

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, ஈஸ்டர் தாக்குதலின் போது கடந்த ஆண்டு ஜனாதிபதியாக காணப்பட்ட மைத்திரிபால சிறிசேன அவர்களும் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், யார் மீதுதான் குற்றச்சாட்டுக்கள் இல்லை. என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நான் கவனம் செலுத்துவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், இதன்போது உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

எனினும் இதற்கு பதிலளிக்காமல் அவர் அவ்விடத்தை விட்டு சென்றதை காட்சிகள் காட்டுகின்றன.

எவ்வாறாயினும் நாளை நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் தொடங்குகின்ற நிலையில் மைத்திரி தனது மௌனத்தை கலைத்து விசேட அறிவிப்பை வெளியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like