சந்தேக நடமாட்டம் – முஸ்லிம்கள் இருவர் வத்தளையில் அதிரடியாக கைது

கொழும்பின் புறநகராகிய வத்தளை – ஹேகித்த வீதியில் உள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தம்பதியினர் என்பதோடு மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தருணத்தில் அவர்களிடத்தில் தேசிய அடையாள அட்டைக்கூட இருக்கவில்லை என கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

You May also like