மன்னார் கோர விபத்து- சாரதி, பாதுகாப்பு கடவை அதிகாரிக்கு மறியல்!

புகையிரதக் கடவையில் நேற்று ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பிலான வழக்கில், கடவையின் பாதுகாப்பு ஊழியர் மற்றும் விபத்துக்குள்ளான  தனியார் பேரூந்து சாரதியையும் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவளிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியில் நேற்று மதியம் புகையிரதம் மற்றும் தனியார் பேரூந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்த நிலையில் 24 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பான வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் மற்றும் விபத்துக்குள்ளான தனியார் பேரூந்து சாரதியையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

அதற்கமைய புகையிரத கடவை பாதுகாப்பு ஊழியர் மற்றும் பேரூந்து சாரதியையும் இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You May also like