பதுளை விபத்தில்14 பேர் பலி

பதுளை பசறை வீதியில இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், குறித்த பஸ் விபத்தில் 31 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பதுளை – பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பயணித்த பஸ் ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுகலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

You May also like