சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய்-செல்போனை பறித்த அஜித் (VIDEO)

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்தார்கள்.

இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சற்றுமுன் தளபதி விஜய் சைக்கிளில் வந்தார். அவருடன் அவருடைய ரசிகர்களும் ஏராளமானோர் வந்தனர். வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்களிக்க செய்தனர். விஜய் வாக்களித்த பின் தான் வந்த சைக்கிளில் திரும்பி வீட்டுக்கு சென்றார்.

You May also like