அடுத்த தேர்தலில் தனி வழியில் மைத்திரி?

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் புதிய கூட்டணியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் ஒன்றிணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகிப்பவர்கள் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்  இதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாண சபை தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like