சம்பிக்க – விமல் விரைவில் இணைவு?

அமைச்சர் விமல் வீரவன்சவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் இணைந்து புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த இருவரும் இணைந்து, புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க உதவிசெய்த சிவில் அமைப்புக்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள முன்னணி பௌத்த தேரர்கள் இணைந்து இதற்கான பேச்சுக்களை இருவரிடத்திலும் நடத்தியிருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த இருவரும் நேருக்குநேர் இதுவரை பேச்சு நடத்தவில்லை என்றாலும், அதற்கான முதற்கட்ட நடவடிக்கையை எடுக்கவே தயாராகி வருவதாக மேலும் தெரியவருகின்றது.

You May also like