புறக்கோட்டையில் தீ

கொழும்பு – புறக்கோட்டையில் உள்ள பிளாஸ்டிக் பொருள் விற்பனை நிலையமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன

இதனையடுத்து, 8 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

You May also like