கிரீடத்தை பறித்த ஜுரிக்கு பிணை

கொழும்பில் அண்மையில் நடந்த திருமதி அழகுராணிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் திருமதி அழகுராணி கரொலின் ஜுரி மற்றும் போட்டிக் குழுவிலிருந்த சூலா பத்மேந்திர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் திருமதி அழகுராணி புஸ்பிக்கா வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இன்று பகல் கைது செய்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

பலவந்தப்படுத்தியமை, அச்சமூட்டியமை, சிறு காயத்திற்கு உள்ளாக்கியமை போன்ற குற்றச்சாட்டில் இவர்கள் கருவாத்தோட்டத் பொலிஸாரினால் கைதாகியிருந்தனர்.

மேலும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.

You May also like