கிரீடத்தை பறித்த ஜுரி நீதிமன்றில் ஆஜர்!

திருமதி உலக அழகியான ஜூரி கரோலின் மற்றும் முன்னாள் மாடல் சூலா பத்மேந்திரா ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை திருமதி இலங்கை போட்டியில் நடந்த சம்பவம் குறித்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கைகளை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புஷ்பிகா டி சில்வாவிடம் மன்னிப்பு கேட்க ஜூரி மறுத்துவிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்தர்.

அதே நேரத்தில் புஷ்பிகா மன்னிப்பு கேட்காமல் இந்த விஷயத்தை தீர்க்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் அவர் தற்போது புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

You May also like