ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு உடன் அமுலாகும் வகையில் ஆறு பேர் அடங்கிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக பிரமோதய விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஏனைய உறுப்பினர்களாக ரொமேஷ் கலுவிதாரன, ஹேமந்த விக்ரமரத்ன, வருட வரகொட உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது