நாடாளுமன்றத்திற்கு இன்று செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்கின்றார்.

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி மேற்படி விஜயம் செய்கின்றார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய கலந்துகொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

You May also like