தங்கொட்டுவயில் கைப்பற்றப்பட்ட எண்ணெயில் விஷம்

காலி – தங்கொட்டுவ பிரதேசத்தில் வைத்து அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலனில் இருந்த தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் எப்லொடொக்ஸின் விஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கப்பிரிவு இதனை இன்று பகல் தெரிவித்துள்ளது.

எதிரிசிங்க எபிபல் என்கிற நிறுவனம், ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு கொள்கல் லொறிகள் தங்கொட்டுவ பகுதியில் வைத்து அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like