குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்சா பொலிஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்