நிறைவேற்று ஜனாதிபதியை நீக்க அரசு ஆலோசனை!

வருகிற நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற அமைவுகளில் நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இந்த விவகாரம் பற்றி அமைச்சர்கள் இடையே பேச்சு இடம்பெற்றுள்ளது.

அவ்வாறு ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு நாடாளுமன்ற முறைமை கொண்டுவந்தால் ஜனாதிபதி வேட்பாளர் நெருக்கடி இனி ஏற்படாது என்றும் அவர்களுக்கு இடையே பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் பிரிவை உள்ளடக்கினால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற எதிரணியினரின் ஆதரவையும் பெறலாம் என்றும் அவர்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May also like