மைத்திரி அணிக்குள் உருவாகும் சூழ்ச்சி அலை- வந்தது அதிர்ச்சி தகவல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக அந்தக் கட்சிக்குள்ளேயே சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் தாம் முழுவீச்சாக ஈடுபட்டுள்ள நிலையில் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலரே இவ்வாறு தனக்கெதிராக சூழ்ச்சி செய்வதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

கட்சிக்குள் பெரும்பாலான உறுப்பினர்கள் தனக்கு எதிராகவே இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், எந்த சவால்களையும் வெற்றிகொள்வதாகவும் சூளுரைத்துள்ளார்.

You May also like