ஆட்கடத்தலை கண்டுபிடிக்க ஆஸி வழங்கிய ட்ரோன்கள்

ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு   அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  இலங்கைக்கு  5 ட்ரோன்கள்   அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா  ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள்  மற்றும்  இயற்கை   சீற்றங்கள் குற்றவியல் விசாரணைகளை கண்காணிப்பதற்காக  இவ்வாறு  ட்ரோன் கருவிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுடன்  ஒன்றிணைந்து  செயற்படுவதனால்    சட்டவிரோத    குடியேறிகள் மற்றும்   ஆட்கடத்தல் கடத்தல்காரர்கள்  அடையாளங் காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்

அத்துடன் இலங்கைக்கு  தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும்  அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

You May also like